தங்கை திவ்யாவின் கவிதைகள்


“கை”

வலது”கை’’ யான
தன்னம்பிக்கையால்
மங்கையாக...
பொன்னகையான
புன்னகையான
தார கை யாக...
கங்கையென ஈகை...
கைகளப்பு இல்லா
இந்த வாடகைவாழ்க்கையில்...
உலகை உலாவர,
கையில்லா எனக்கு
உதவும் அத்தனை
கைகளுக்கும்
என் கையொப்பத்துடன்
இருகை கூப்பிய
          நன்றி!!!


                                                     திவ்யா                              
No comments:

Post a Comment